குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திட மூலிகை சிகிச்சை.இயற்கை மருத்துவ முறையை பயன்படுத்தி அனுபவமிக்க மருத்துவர் மற்றும் உளவியல் வல்லுநர்களால் இம்மையம் நடத்தப்படுகிறது.

போதையற்ற உலகே எங்கள் இலக்கு

போதையை மாற்றிட புதிய பாதை... 94436 - 07174

Sunday 6 October 2013

மதுப்பிரியர்களுக்கு டிப்ஸ்


எந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உடலைக் கட்டுக்குள் வைப்பதில் தவறிவிடுக்கின்றனர்.அதே போன்று மதுப்பிரியர்களும் தங்களின் மனம் கவர்ந்த மதுவினை எப்படி கையாள வேண்டும் என்று கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக மதுவின் அடிமையாகின்றனர்.இதைத் தவிர்க்க "டாஸ்மாக் பிளாக்" சில நல்ல
அறிவுரைகளை மதுப்பி¡¢யர்களுக்கு வழங்க உள்ளது.படித்துப்பயன் பெறுவதுடன் எமது வலைத்தளத்தை பரப்புவீர்.


மது அருந்துவதற்கு முன்:
மது அருந்த தேர்ந்தெடுக்கும் மதுக்கூடம் சுகாதாரம் மிகுந்ததாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
நின்று கொண்டு குடிப்பதை முழுவதுமாக தவிர்க்கவும்.
பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் தவிர்க்கவும்.
முழு உணவை உட்கொள்ளவும்.ஒரு முழுமையான உணவுமது உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, நச்சுப்பொருட்களை உடல் கையாள்வதற்கு வழி வகை செய்கிறது.
மதுவின் நீர் பி¡¢தலுக்கான விளைவு செயல்படத் தொடங்குவதற்கு முன்,நீர்ச்சத்திற்காக ஒரு தம்ளர் நீர் அருந்தவும்,இரத்த ஓட்டத்தில் மது                உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க பால் கூட உதவலாம்.

மது அருந்தும் போது :
அளவுடன் அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.உடலானது ஒரு பானத்தைப் பகுப்பதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்
கொள்கிறது.
ஒவ்வொரு முறை மது அருந்திய பின்னரும் ஒரு தம்ளர் நீர் அருந்தவும்.
உடலின் வளர்சிதைமாற்றச் செயல்பாட்டிற்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால்,பல வகையான மதுபானங்களை ஒன்றாகக் கலந்து பருக வேண்டாம்.
சைட் டிஸ்ஸில் கவனம் செலுத்தி  அதிகம் எண்ணெய் கலந்த பொறித்த பொருட்களை தவிர்க்கவும்.
சிறிது சிறிதாக மதுவைப் பருகி நமக்கான அளவுடன் நிறுத்துதல் நலம்.

மது அருந்திய பின் :
ஒருபோதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிகம் பேசுவதை தவிர்க்கவும்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் நீர் அருந்தவும்.
காலையில் உங்கள் உணவு முட்டைகள்( சிஸ்டெயினுக்காக),ஒரு வாழைப்பழம்(பொட்டாசியத்திற் காக),மற்றும் பழச்சாறு(சர்க்கரை மற்றும் வைட்டமின் களுக்காக) ஆகியவை அடங்கிய உணவுகள் நன்மை தரும்.
காஃபி,தேநீர்,சோடா ஆகியவற்றைத் தவிர்க்கவும்,ஏனெனில் இவை மேலும் நீர்ச்சத்துக் குறைவை ஏற்படுத்தலாம்.
                                               உடலினை உறுதிசெய்.

நன்றி - டாஸிமாக் செய்திகள்.

No comments:

Post a Comment